Published on 26/10/2018 | Edited on 26/10/2018
![People blocking the road](http://image.nakkheeran.in/cdn/farfuture/hlbXepq4s57ZU_PcQSn2AlVdPnNCndQCUCmK5Ysn1Fg/1540573182/sites/default/files/inline-images/71_2.jpg)
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்த வலியுறுத்தி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் அவதிப்படுவதாக மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.