Skip to main content

’சின்மயியை சும்மா விடப்போவதில்லை; ஆதாரங்களை வெளியிடுவேன்’-ராதாரவி பாய்ச்சல்

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
r

 

திரைப்பட பின்னணி பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் இருந்த சின்மயி,  மீடூ விவகாரத்தால் பரபரப்பானார்.  கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.  

 

இந்த விவகாரம் குறித்து சின்மயி தொடர்ந்து மீடியாக்களில் பேசி வந்த நிலையில்,  அவர் டப்பிங் யூனியனில் இருந்து திடீரென நீக்கப்பட்டார்.  யூனியனுக்கு அவர் சந்தா செலுத்த மறுத்ததால் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.  

 

மீடூ விவகாரத்தால் பாடல் வாய்ப்புகளை இழந்த நிலையில்,  டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதால் டப்பிங் பேசும் வாய்ப்பையும் இழந்துள்ளார்.   

 

c

 

இந்த நிலையில் டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி மீது அவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.   ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம். அவருக்கு அப்படி ஒரு பட்டமே வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

 

r

 

இதுதொடர்பாக மலேசிய நாட்டின் மெலேகோ மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலையும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அந்த கடிதத்தில் ராதா ரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருப்பதாக அரசு செயலர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  எனவே ராதாரவி பயன் படுத்துவது போலி பட்டம் என்று விமர்சித்துள்ளார். 

 

c


இது குறித்து ராதாரவி,  ’’வைரமுத்துவை பிளாக் மெயில் பண்ண பார்த்தார். முடியவில்லை. இப்போது என்னிடம் வந்து இருக்கிறார்.  மலேசியாவில் டத்தோ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார்.  நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் சென்னை திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன்.  சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்’’ தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்