
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வயது மூப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இருந்தபோதிலும் ராமகோபாலன் வயது முதிர்ச்சி காரணமாக நேற்று மாலை மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இவரது மரணத்திற்கு தமிழ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.
ராமகோபாலன் உடல், திருச்சி உறையூர் சீராத்தோப்பில் உள்ள குழுமணி இந்து முன்னணி பண்பாட்டு பயிற்சி கல்லூரியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இன்று மதியம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-மகேஷ்