Skip to main content

ராஜீவ்காந்தி பிறந்தநாள்: திருநாவுக்கரசர் மரியாதை

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
 ராஜீவ்காந்தி பிறந்தநாள்: திருநாவுக்கரசர் மரியாதை



ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இன்று காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். பின்னர் அவர் 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் உள்ள  ராஜீவ்காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ராஜீவ்காந்தி பஞ்சாயத்தது ராஜ் சங்கதன் சார்பில் ராஜிவ்காந்தியின் கனவு திட்டமான பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேறி தமிழக அரசினை உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி அதன் தலைவர் செங்கம் ஜி.குமார் அவர்கள் தலைமையில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கையெழுத்து  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவின் தென் மாநில ஒருங்கிணைப்பாளர் கீதா ரெட்டி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி, மாநில தேர்தல் அதிகாரி பாபிராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எஸ்.பீட்டர்அல்போன்ஸ், பி.விஸ்வநாதன், கே.ராணி, டி.யசோதா மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படங்கள் - அசோக்குமார்

சார்ந்த செய்திகள்