Published on 17/11/2018 | Edited on 17/11/2018

கஜா புயல் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. பலி எண்ணிக்கை 36 -ஐ தொட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும் எனக்கூறியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.
— Rajinikanth (@rajinikanth) November 16, 2018