Published on 27/10/2021 | Edited on 27/10/2021
பண்ருட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த விசூர் கிராமத்தில் நெல்லை விற்பனை செய்ய நாற்பது நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் இன்று தாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ள விவசாயிகள், 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்ததோடு ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.