பாலியல் கொடுமைக்கு புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காத
இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம்
இரயில்வே துறை Section Eng மணிவண்ணனின் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக 18 பெண் தொழிலாளர்களுக்கும் மேல் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து இன்று மாலை 5 மணி அளவில் DREU - C |T U சார்பில் ஆர்ப்பாட்டம். திருச்சி ஜங்சன் DRM அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ClTU மாநில பொதுச் செயலாளர் G. சுகுமாறன் DREU செயல் தலைவர் D.ஜானகி ராமன் துணை பொதுச் செயலாளர் கோ.சாம்பசிவன் டிவிசன் தலைவர் யாதவ் செயலாளர் கண்ணன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
-ஜெ.டி.ஆர்