தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. உலக நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசி சோதனைகள் பரிசோதனையில் இருந்தாலும் இதுவரை பரிபூரண வெற்றி கிடைக்கவில்லை. சில நாடுகளில் தற்போதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இந்த கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தற்போது மத்திய அரசு பள்ளிகளை திறக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், ஆந்திரா, அசாம், ஹரியானா, மேகாலாயா, காஷ்மீர், நாகாலாந்து, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இணைய வகுப்புகள் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் காலண்டு தேர்வு நடக்காத நிலையில், தற்போது மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 21ம் தேதி முதல் 25 தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.