மேற்கு தொடர்ச்சி மலையான சத்தியமங்கலம் மலைப்பகுதி தற்போது புலிகள் சரணாலயமாக உள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மலைப்பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வந்தது. இப்போது அவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் இந்த வனப்பகுதியில் முக்கிய வன விலங்காக இருப்பது புலி மற்றும் சிறுத்தைகள் தான். இதில் சிறுத்தைகள் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தி விட்டது. குறிப்பாக இப்போது செயல்படாமல் உள்ள கல் குவாரிகளில், அந்த புதர்களில் சிறுத்தைகள் தஞ்சமடைந்து அந்த புதர்களை அவர்களது வாழ்விடமாக வைத்துள்ளது.
தாளவாடி அருகே உள்ள தோட்டகாசனூர் சுசைபுரம் கிராமங்களில் பல சிறுத்தைகள் ஊருக்குள் வந்து பிறகு காட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கிறது. இதனால் பீதி அடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்து இங்கு வரும் சிறுத்தைகளை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும். ஆகவே கூண்டு வையுங்கள் என கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து சூசைபுரம் பகுதியில் இரண்டு சிறுத்தை பிடிக்கும் கூண்டுகளை வனத்துறையினர் வைத்துள்ளார்கள். சிறுத்தைகளுக்கு குடிநீர் உட்பட மறைந்து வாழும் பகுதியாக இந்த செயல்படாத கல்குவாரிகள் இருப்பதுதான் காரணம்.
இப்போதெல்லாம் சிறுத்தைகள் கவனமாகத் தான் மலை பகுதிகளில் வாழ்கிறது. அவ்வளவு எளிதாக கூண்டுக்குள் சிக்குமா...?