Published on 15/10/2019 | Edited on 15/10/2019
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த வியாழக்கிழமை அன்று சென்னையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்று கூறினார். அதோடு இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் கமலும் ஒருவர். அவரது படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு ரசிகையாக அவரை சந்தித்து பேசியுள்ளேன்’ என்று கூறியிருந்தார். பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்தும், விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனும் நண்பர்கள். இதனால் சென்னை வந்த போது விஜயகாந்தை சந்திப்பார் என்று எதிர்பார்த்த விஜயகாந்த் மகனுக்கும், விஜயகாந்த் குடும்பத்திற்கும் பெரும் ஏமாற்றம் கிடைத்தது. இதனால் பி.வி.சிந்து விஷயத்தில் கமல் மீது விஜயகாந்த் குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது பற்றி நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன், உரிமையாளராக இருந்த சென்னை பேட்மிட்டன் அணியில், ஆரம்பத்தில் விளையாடியவர் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து. அதன் பிறகு பல போட்டிகளில் வெற்றி பெற்ற சிந்து, உலக அளவில் பிரபலமாகி விட்டார். இதனால், சிந்து என்னோட உடன் பிறக்காத சகோதரி என விஜயகாந்த் மகன் சொல்லி வந்தார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள சென்னை வந்த பி.வி.சிந்து தங்களது வீட்டிற்கு வரவில்லை என்ற வருத்தத்தில் விஜயகாந்த் குடும்பம் இருந்ததாக சொல்லப்டுகிறது. அதோடு தங்கள் வீட்டிற்கு வராமல் கமல் கட்சி அலுவலகத்துக்கு சிந்து சென்றதால் பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.