புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது
ஓய்வூதிய முறையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 7ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டம், தா்ணா, முற்றுகை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நல்ல பதில் கிடைக்கும் வரை காத்திருப்போமன் என்று மாற்று உடை பெட்சீட் உள்ளிட்ட பொருட்களுடன் வந்து குவிந்தனர். காத்திருப்பு போராட்டத்தையும் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தக் கூடாது என்று அனைவரையும் கைது செய்வதாக கூறி கைது செய்தனர். எத்தனை முறை கைது செய்தாலும் போராட்டங்கள் தொடரும் என்றனர். போராட்டத்திற்கு வந்த ஒரு ஆசிரியர் மத்திய பாடத்திட்டத்தை ஒழிப்போம். நீட் தேர்வை எதிர்ப்போம் என்ற வாசகத்துடன் அட்டைகளை கட்டிக் கொண்டு அனைவரின் கவணத்தையும் ஈர்த்தார்.
-இரா.பகத்சிங்