புதுச்சேரி: நெல் விலை நிர்ணய ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது.
வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் துறைசார்ந்த அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் நெல் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறையாமல், அரசு நேரடியாக கொள்முதல் செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையினை தயார்செய்ய கூட்டுறவு பதிவாளர், குடிமைப்பொருள் வழங்கல் பொருள் இயக்குனர் மற்றும் வேளாண் இயக்குனர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
- சுந்தரபாண்டியன்