Skip to main content

தனியார் ரயில்! தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Private train! Trade unions struggle

 

மத்திய அரசு சுற்றுலா என்ற பெயரில் கோவை – ஷீரடி இடையிலான விரைவு ரயிலையும், ராமாயண யாத்ரா என்கிற பெயரில் டெல்லி – நேபாள் விரைவு ரயிலையும், பாரத் கெளரவ் என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களையும் மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது.

 

இதனைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் தென்னக ரயில்வே முழுவதும் கருப்பு தினமாக அனுசரித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனை முன்பு பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பொதுச் சொத்துக்களையும், அரசுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். சுற்றுலா என்ற பெயரில் ரயில்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.  


சார்ந்த செய்திகள்