Skip to main content

கொரோனா வைரஸ் - கைதிகளை சொந்த ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

 

மதுரை மத்திய சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல், 399, 379 போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

 

Central



மதுரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்கள் பழனி குமார், கார்த்திக், CJM நீதிபதி ஹேமநந்தகுமார், PDJ நீதிபதி நஜிமா பானு, சட்ட உதவி ஆணைய நீதிபதி தீபா அவர்கள், உட்பட 12 நீதி நடுவர்கள் கலந்துகொண்டு சிறைவாசிகளை சொந்த ஜாமீனில் விடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். 
 

இவர்களில் பிணை விடுதலைக்கு தகுதி பெற்ற சிறைவாசிகளை மதுரை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு இன்று பிணையில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 58 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் சிறு சிறு குற்றங்களை செய்த கைதிகள் மற்றும் குறைந்தப்பட்ச தண்டனை பெற்ற கைதிகளை சொந்த ஜாமீனில் நிபந்தனையுடன் விடுவிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இதில் கைதிகள் பலர் விடுவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்