Skip to main content

அசைவத்திற்கு தடை? அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை!!!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தில் அசைவம் வாங்க, ஊரடங்கு தடை உத்தரவையும் மீறி பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வெளியே வருகின்றனர். அப்படி வருவதோடு, அவைச கடைகளில் இடைவெளி விட்டு நிற்காமல் கூட்டமாக நிற்கின்றனர். இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட அசைவ கடைகள் சீல் வைக்கப்பட்டன. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் சில கடைகள் சீல் வைக்கப்பட்டன. கடந்த ஞாயிறன்று திருவண்ணாமலை நகர மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

prevent people from coming out


இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை அசைவ பொருட்களான கோழி, ஆடு, மீன் போன்றவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கலமா என அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்