Skip to main content

குடியரசு தலைவர் வருகை... முதல்வர் ஆலோசனை!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

President's visit ... Chief Minister's advice!

 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து திமுக அரசின் தலைமையிலான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிந்தது. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் வரும் ஆகஸ்ட் 2- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் திறக்கப்பட இருக்கிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கலைஞரின் உருவப்படத்தைத்  திறந்து வைக்க இருக்கும் நிலையில், படத்திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் பங்கேற்க இருக்கிறார்.

 

இந்நிலையில், படத்திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரின் தமிழக வருகையையொட்டிய முன்னேற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்