Skip to main content

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்குவதை தவிர்க்க வேண்டும்: சுகாதார அமைச்சர்

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்குவதை தவிர்க்க வேண்டும்: சுகாதார அமைச்சர் 



மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் அரசில் டெங்கு காய்ச்சல் தடுப்பிற்காக தொடர் பன்முக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 02-10-17 அன்று நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் வாரம்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமை டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார், இதனையடுத்து இன்று 05-10-17 சென்னை ஆவடி காமராஜர் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சைதப்பேட்டை மாந்தோப்பு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்