தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் நேற்று நடத்திய அடையாள வேலை நிறுத்தத்தினால் அஞ்சலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

முக்கிய சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததால் சென்னையில் உள்ள பெரும்பான்மையான அஞ்சலகங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் வேலைக்கு வந்துள்ளனர். அதிலும் பூக்கடை, எத்திராஜ் சாலை உட்பட பல அஞ்சலகங்களில் ஒருவர் கூட வேலைக்கு வராததால் அஞ்சலக வாயில் பூட்டப்பட்டிருந்தது. இதனால் கடிதங்கள், பார்சல்கள் சேகரிப்பு, பட்டுவாடா செய்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.