Skip to main content

கருங்கல்பாளையத்தில் கயிறு, மணி, சாட்டை விறுவிறு விற்பனை

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

 Pongal festival reverberates; ropes, bells, whips are sold briskly

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். அதன்படி 12ம் தேதி மாட்டு சந்தை கூடியது. பசு மாடு, எருமை மாடு, கன்றுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன.

 

வெளிமாநில வியாபாரிகளும் அதிக அளவில் கூடி இருந்தனர். வரும் திங்கட்கிழமை மாட்டு பொங்கல் என்பதால் மாட்டு சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி, சாட்டை ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

 

குறிப்பாக மாடுகளுக்கு அணிவிக்கப்படும் கயிறு, கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, கழுத்து மணி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. கழுத்து மணி சிறியது 20 ரூபாய்க்கும், பெரிய மணி 150 ரூபாய்க்கும், திருகாணி 20 முதல் 50 ரூபாய்க்கும், கழுத்து கட்டி கயிறு 20 முதல் 200 ரூபாய் வரைக்கும், சாட்டை 50 முதல் 200 ரூபாய் வரைக்கும், மொளக்குச்சி கம்பி 50 முதல் 100 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.

 

 

சார்ந்த செய்திகள்