கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் கழுத்தறுத்து அரை நிர்வாணத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞர் சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் சதீஷ் சிக்கியதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவி பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கோவை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை நேற்று முன் தினம் முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல அந்த இளம்பெண் அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போன கல்லூரி மாணவி என உறுதி செய்யப்பட்டது. அதேபோல இந்த மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பார் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மாணவியின் கொலை வழக்கில் இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரகதி கொலையில் பிடிபட்ட சதீஷ்குமார். எனக்கு கிடைக்காத பிரகதி அவனுக்கு எப்படி கிடைக்கலாம் அதனால் தான் அனுபவித்து என் நண்பனுடன் கொன்றேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியை சதீஷ் ஏற்கனவே பெண் கேட்டிருந்ததாகவும் ஆனால் பெண்ணின் பெற்றோர் படிப்பை கரணம்காட்டி இப்போது வேண்டாம் என கூறியதை அடுத்து சதீசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில், மாணவி பிரகத்திக்கு வேறொருவருடன் அண்மையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் தனக்கு அந்த பெண் கிடைக்காததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.