தந்தை பெரியாரின் 143- வது பிறந்த நாள் விழா இன்று (17/09/2021) சமூக நீதி நாளாக, இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
பெரியார் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பெரியாரின் சிலைக்கு இன்று (17/09/2021) காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பகுதிச் செயலாளர்கள் நடராஜன், ராமச்சந்திரன், குறிஞ்சி தண்டபாணி, செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், லோகசந்திரன், தலைமை கழகச் பேச்சாளர் இளைய கோபால், முன்னாள் நகர செயலாளர் முனுசாமி, மருத்துவர் அணி டாக்டர் விவேக், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் அதன் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் போது மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் ரஜேஷ் ராஜப்பா, புனிதன், பாபு என்கிற வெங்கடாசலம், அம்மன் மாதேஷ், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், விஜயகண்ணா, வின்சென்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் த.பா.பரமேஸ்வரன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பு செயலாளர் ஈரோடு அரசாங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஜீவாதங்கவேல் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சுப்பிரமணியம், சண்முகம், மகேந்திரன், பழனிச்சாமி, நவீன், ராஜா, பார்த்திபன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.