Skip to main content

"பொதுமக்களிடம் அதிக கட்டணம் வாங்கினால்..." - காவல்துறை கடும் எச்சரிக்கை!

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

hkj

 

நாடு முழுவதும்  தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது, அப்படி பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனத் தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் காலை முதல் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பாரிமுனை, அண்ணா நகர், வடபழனி, தியாகராயநகர், பெரம்பூரில் 90% பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டு சென்னை திரும்பியவர்களுக்குப் பேருந்து கிடைக்காததால் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உள்ளே மதியம் மூன்று மணியளவில் ஒரு பேருந்து கூட இல்லாத நிலை இருந்தது. இதனால் மக்கள் பேருந்து நிலையத்தின் நிழற்கூரையில் அமர்ந்து பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

 

இந்நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் அதிக கட்டணத்தை கேட்பதாக புகார் எழுந்தது. சாதாரண நாட்களில் 20 ரூபாய் கொடுத்து பயணிக்கும் இடங்களுக்கு இன்றைக்கு 30, 35 ரூபாய் கேட்பதால் பொதுமக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதன்பேரில் சென்னை முழுவதும் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் வந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அதிக கட்டணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்