சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை தற்போது நிறைவு செய்து உள்ளார்.
தற்போது கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து பெங்களூர் புறநகரில் இருக்கும் தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். இந்நிலையில் சசிகலா தொடர்பாக பேசிய தினகரன், அதிமுக பொதுக்குழுவை கூட்ட அனைத்து அதிகாரங்களும் சசிகலாவுக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமமுக அதிமுகவில் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, "டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் இணைக்க பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.