Skip to main content

போலீசாரையே துரத்தி பிடித்த போலீஸ்;சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

காவலரை சக காவல் அதிகாரியே துரத்தி பிடித்து விபத்தாக்கிய சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

அதாவது கடந்த(21-11-2018) ஆம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து காவலர் தர்மன் என்பவர். தனக்கு மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விடுப்பு தரவில்லை. "எனது தாயின் நினைவேந்தல் நிகழ்ச்சி (காரியம்) நடத்த வேண்டி உள்ளது. அதற்கு நான் பணம் திரட்ட வேண்டும். உறவுக்காரர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். ஆனால், இன்ஸ்பெக்டர் லீவு கொடுக்க மறுக்கிறார். இப்ப நான் என்ன செய்ய.?" இப்படி வாக்கி டாக்கியில் பேச. அது சிட்டி முழுக்க எதிரொலித்துவிட்டது. உடனடியாக வாக்கி டாக்கியை ஒப்படைத்துவிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு வருமாறு தருமனிடம் தகவல் சொல்லப்பட்டது.

 

police inspector suspend!

 

மேலும், டி.சி மற்றும் ஜே.சி ஆகியோர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பிடித்து எகிரவே, கடுப்பான இன்ஸ்பெக்டர், நடு சாலையில் பாய்ந்து சென்று தருமனை மடக்கிப் பிடித்திருக்கிறார். அப்போது  எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதி கீழே விழுந்தார்  தர்மன். இது தொடர்பான காட்சிகள்  எல்லாம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளி வந்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் முன் விரோதம் காரணமாகதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என பல குற்றச்சாட்டுகள் எழ, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வளர் ரவிச்சந்திரனை சென்னை காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் கீழே விழுந்த காவலரின் மனைவி இது தொடர்பாக வழக்கு தொடுக்க உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்