கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள செங்கனாங்கொல்லை கிராமத்தில் கடந்த 23-09-21 அன்று இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு வழக்கு சம்மந்தமாக திருக்கோவிலூரர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கை கண்டுபிடிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவுபடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் இளவழகி தலைமையில், உதவி ஆய்வாளர் சிவசந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திலிருந்த 30க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகில் உள்ள தனத்துமேட்டைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது மகன் விஜி (25) என்பது தெரியவந்தது. மேற்படி நபரை பிடித்து விசாரணை செய்ததில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு, வேலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்குள் செயின் பறிப்பு செய்ததையும், பாண்டிச்சேரி லாஸ்பேட்டை ECR ரோட்டில் ஒரு பல்சர் NS-220 வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
மேற்படி நபரிடமிருந்து பல்சர் பைக், 09 கிராம் உருக்கிய நகையும், 21 கிராம் தங்க செயின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. உண்மை குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்ய உதவிய உட்கோட்ட குற்றப்பிரிவினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.