
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் ரமேஷ் என்பவரிடம் கனடா நாட்டில் குவாலிட்டி இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாகவும், மேலும் அதற்கான உத்தரவு இமெயிலில் வந்து விட்டதாகவும் கூறியதையும் நம்பிய ரமேஷ் கடந்த 25.07.2017 அன்று ஆண்டிபட்டி பாரத வங்கி கிளையில் ரூபாய் 52 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு செலுத்தினார். அதன் பின்னர் அவர்களிடமிருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ் கடந்த 21.12. 2017 அன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அவர்களிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதில், குற்றவாளிகள் அனைவரும் மும்பையில் இருப்பது உறுதி செய்யப்பட்டு கடந்த 22.04.2018 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் உத்தமபாளையம்
எஸ்.ஐ. இத்ரீஸ்கான் மற்றும் கண்டமனூர் எஸ்.ஐ. சுல்தான் மற்றும் காவலர்கள் மும்பை விரைந்தனர்.
அங்கு பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கேம்பஸ் மில்லர், மற்றும் மும்பையைச் சேர்ந்த காலித், முகமது நவாஸ் மனிகர், அப்துல் முகமது ஷரீப் ஆகிய குற்றவாளிகளை கைது செய்து இன்று அதிகாலை தேனி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தீவிர விசாரணைக்குப் பின் அனைவரும் நீதி பதியிடம் ஆஜர்படுத்தப்பட்டதின் பேரில் வெளி மாநில மோசடி கும்பலை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்திவிட்டார். அதையடுத்து குற்றவாளிகள் பெரியகுளம் சப் -ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.