Published on 16/12/2019 | Edited on 16/12/2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த டிசம்பர் 9- ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (16.12.2019) மாலை 05.00 மணியுடன் நிறைவு பெற்றது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு சுமார் 2 லட்சம் பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தமிழகம் முழுவதும் நாளை (17.12.2019) நடைபெறவுள்ளது. அதேபோல் வேட்பு மனுவை திரும்ப பெற டிசம்பர் 19 ஆம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு தேர்தலில் போட்டியிடுவோரின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.