போலீஸ் ஐஜிக்கள் 2 பேர் மாற்றம்
தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவின் படி போலீஸ் ஐஜிக்கள் 2 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழக சிலை தடுப்புப் பிரிவு ஐஜி தமிழ்சந்திரன் மாற்றப்பட்டு, திருச்சி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே ஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல், சிலை தடுப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனிப்பார் என்று உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.