Skip to main content

20 சதவிகித இடஒதுக்கீடு கோரி பா.ம.கவினர் மனு!  

Published on 23/12/2020 | Edited on 24/12/2020

 

pmk

 

வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் அக்கட்சியினர் மனு கொடுத்தனர். இந்நிலையில் இன்று 23-ஆம் தேதி வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநகராட்சி, பேரூராட்சிகளில் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.

 

ஈரோடு மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், மேலும் மாவட்டத்தில் உள்ள சித்தோடு, நசியனூர், காஞ்சிகோவில், கருமாண்டி, செல்லிபாளையம், சென்னிமலை, மொடக்குறிச்சி, பூந்துறை, அரச்சலூர் உள்பட சில பேரூராட்சி அலுவலகங்களிலும் அங்குள்ள அதிகாரிகளிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாம் மண்டல அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட பா.ம.க.வின் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் உதவி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம்,  உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்