Skip to main content

ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Published on 01/04/2018 | Edited on 01/04/2018


 

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக மாநில துணைப் பொதுச் செயலாளர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில மாணவரணி செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கில் இன்று காலை நடைபெற்றது. 
 

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, மாநில நிர்வாகிகள் ஏ.கே.மூர்த்தி, பு.தா அருள்மொழி, மு. துரை, இசக்கிப் படையாச்சி, பொங்கலூர் மணிகண்டன், வெங்கடாஜலபதி ரெட்டியார்,  ரமேஷ் நாயுடு சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்