Skip to main content

பிரதமர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியவர் கைதாகி விடுதலை!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜீவானந்தம். இவர் தற்போது திருச்சி கருமண்டபம் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் இவன் பார்ப்பனர்களுக்கு எதிரி என்கிற அடைமொழியோடு தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர், ஆகியோர் படங்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார் என்றும், இவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்றும் பாஜகவைச் சேர்ந்த மருங்காபுரி ஒன்றியத் தலைவர் பொன்னுவேல் மத்திய மண்டல ஐஜியிடம் புகார் கொடுத்தார்.
 

pm narendra modi facebook trichy person police


அதன் அடிப்படையில் மணப்பாறை புத்தானத்தம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து வையம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகநாதன், ஜீவானந்தத்தைத் தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி கருமண்டபம் பகுதியில் இருந்த ஜீவானந்தத்தை கைது செய்தனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக நீதிமன்றம் விடுமுறையில் உள்ளதால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் காவல்துறையினர் கஸ்டடியிலே வைத்து இருந்தனர். பின்பு அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

சார்ந்த செய்திகள்