கைது செய்த விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்க; காவல்துறைக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!
கைது செய்த விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
திருச்சியில் வறண்ட காவிரியில் ஆடி பெருக்கை முன்னிட்டு அம்மா மண்டபத்திற்கு கண்ணீருடன் பார்வையிட சென்ற தமாகா விவசாய பிரிவு தலைவரும், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு திருச்சி மண்டல தலைவருமான புலியூர் நாகராஜன் தலைமையில் சென்ற 7 பேர் கொண்ட விவசாயிகளை திருச்சி காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து ஸ்ரீரங்கம் ரெங்கா மண்டபத்தில் அடைத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்நடவடிக்கை மனித உரிமை மீறலாகும். உடனடியாக கைது செய்த அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
- இரா.பகத்சிங்