கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 20.3.2020 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட யாத்திரிகன் நிவாஸ், இன்று (12.02.2021) பூஜைகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனம் செய்ய வருபவர்கள், மிகப் பாதுகாப்பாக தங்குவதற்கு கட்டப்பட்டுள்ள இந்த யாத்திரிகன் நிவாஸில் சுமார் 1500 பேர் வரை தங்கும் அளவிற்குக் கட்டப்பட்டுள்ளது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்பட்ட இந்த யாத்திரிகன் நிவாஸில் பட்டர்கள் தலைமையில் சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் மட்டுமே இங்கு தங்குவதற்கு பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஸ்ரீரங்கம் தரிசனத்துக்கு வருபவர்கள், தங்குவதற்கு தங்களுடைய முன்பதிவை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம் என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.