பெட்ரோலிய ரசாயன மண்டலமாக்கும் முயற்சியை கண்டித்து விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம்! (படங்கள்)
கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 23 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாதவன் தலைமை வகித்தார். கடலூர் ஒன்றியக்குழு மூத்த உறுப்பினர் வரதராஜன் சங்க கொடியை ஏற்றினார், சங்கத்தின் மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி மாநாட்டை துவங்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வரவேற்பு குழு செயலாளர் வெற்றிவேல் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வேலைஅறிக்கை சமர்பித்தார், நிதி நிலை அறிக்கை பொருளாளர் தட்சிணாமூர்த்தி. தீர்மானங்களை துணைத்தலைவர் கற்பனைச்செல்வம் வாசித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பையன், ராதா வாய்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாயகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதனை தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. பின்னர் 31 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்தெடுக்கப்பட்டது. புதிய மாவட்ட தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக மாதவன்,பொருளாளராக தட்சிணாமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டின் நிறைவுரையாற்றினார்.
கடலூர் மாவட்டத்தை பேரிடர் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தை பெட்ரொலிய ரசாயன மண்டலமாக மற்றும் முயற்சியை கைவிடவேண்டும். பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளை முற்றிலுமாய் அகற்ற வேண்டும் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து மாலையில் புவனகிரி பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிசந்திரன், செயலாளர் மாதவன், வரவேற்புகுழு தலைவர் சதானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
-காளிதாஸ்