கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதி கிராமங்களில் காட்டு யானைகள் அவ்வப்போது வெளியேறி வயல் நிலங்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பவதாரப்பட்டி பகுதியில் விவசாயி ஒருவர் காலை நேரத்தில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பவதாரப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இன்று அதிகாலை தன்னுடைய நிலத்தில் தோட்ட வேலைகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது காட்டு யானை தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலை நேரத்தில் அதிக பனிமூட்டம் இருந்ததால் யானை இருந்தது தெரியாமல் அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக வனத்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் விவசாயி முனுசாமி இறந்தது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். அதேபோல் காட்டு யானையை அந்தப் பகுதி மக்கள் விரட்டி அடிக்கும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.