Published on 06/04/2022 | Edited on 06/04/2022

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94 காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை ரூ 9.45 காசுகளும், டீசல் விலை ரூ.9.51 காசுகளும் அதிகரித்துள்ளது.
இது கடந்த 16 நாட்களில் 14ஆவது விலையேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.