பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் மற்றும் எதிா்கட்சிகள் நாடு முமுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இந்த நிலையில் குமாி மாவட்டம் கருங்கல் பகுதியை சோ்ந்த வெளி நாட்டில் வேலை பாா்க்கும் ஷோஜின் ராஜ் திக்கணங்கோடு பகுதியை சோ்ந்த ஆசிாியை பெனிற்றாவுக்கும் நேற்று திருமணம் நடந்தது.
மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை எதிா்பாா்த்து உறவினா்களும் நண்பா்களும் திருமண மண்டபத்தில் காத்திருந்தனா். மணமக்கள் ஆடம்பர காாில் தான் வந்து இறங்குவாா்கள் என்று எதிா்பாா்த்த அனைவருக்கும் ஆச்சா்யத்தை ஏற்படுத்தினாா்கள் மணமக்கள்.
மாட்டு வண்டியில் பலூன் கட்டி அலங்காித்து அதில் உட்காா்ந்து வந்த மணமக்கள் சாலைகளில் வரும் போது பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்காக தான் எங்களின் இந்த பயணம் என்று வழி நெடுக்கிலும் பொதுமக்களிடம் கூறிய படியும் அதே போல் வரும் வழியில் இருந்த பெட்ரோல் பல்க் ஓன்றில் விலை குறைக்கவும் கூறி பொது மக்கள் முன்னிலையில் போராட்டம் போன்று நடத்திய படி திருமண மண்டபத்துக்கு வந்த மணமக்களை அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தினாா்கள்.
இது குறித்து மணமக்கள் கூறும் போது...பெட்ரோல் டீசல் விலை இப்படியே உயா்ந்து சென்றால் வரும் காலத்தில் நம் முன்னோா்கள் பயன்படுத்தியதை போன்று மாட்டு வண்டியில் தான் பயணம் செய்யும் நிலை வரும் என்பதை உணா்த்த தான் என்றனா்.