Skip to main content

தஞ்சை அருகே பெரியார் சிலை அவமதிப்பு: திருச்சியில் பெரியார் சிலை சேதம்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
Periyar statue


தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. கவராப்பட்டுவில் உள்ள பெரியார் சிலைக்கு காலணி மாலை போடப்பட்டிருந்தது. இதனை கண்டன திராவிடர் கழகத்தினர் அதனை அகற்றிவிட்டு, போலீசாருக்கு தகவல் அளித்தனர். சிலையை அவமதித்தது யார் என்று ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள பெயரில் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், சிலையை சேதப்படுத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

“பெரியாருக்கு உரிய கவுரவத்தை பா.ஜ.க கொடுக்கும்” - அண்ணாமலை

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Annamalai says BJP will give due respect to Periyar

 

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அவரது ‘என் மண், என் மக்கள் நடைப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம். 

 

இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

 

இந்த நிலையில், அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ பெரியார் சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். ஆனால், ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள பெரியார் சிலையின் கீழே உள்ள வாசகத்தை மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மக்களின் கருத்தாக நாங்கள் பிரதிபலிக்கிறோம். அந்த வாசகத்தை தேவாலயத்தின் முன்போ அல்லது மசூதி முன்போ வைக்க ஒப்புக்கொள்வார்களா? அதனால், இந்து கோவில்கள் வெளியே அந்த வாசகம் இடம்பெற வேண்டாம் என்று சொல்கிறோம். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்போது அந்த வாசகம் அகற்றப்படும். பெரியார் சிலை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு மாற்றப்படும். 

 

பா.ஜ.க பெரியாரை அவமதிக்கவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய உரிய கவுரவத்தை கொடுப்போம். அதேபோல், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அதை செய்வோம். ஆட்சியில் இருப்பவர்கள் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதால்தான், பா.ஜ.க கோவில் தொடர்பான தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கிறது” என்று கூறினார்.