Published on 20/06/2022 | Edited on 20/06/2022
2021-2022ஆம் கல்வியாண்டில் தேர்வு எழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவர் தேர்ச்சி விகிதத்தில் 97.95% சதவிகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் முறையே விருதுநகர், ராமநாதபுரம், கோவை, மதுரை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. 86.69% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள வேலூர் மாவட்டம் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் 656 மாணவர்கள் 591 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்றுள்ளனர். 551 முதல் 590 வரையிலான மதிப்பெண்களை 18,977 மாணவர்களும், 501 முதல் 500 வரையிலான மதிப்பெண்களை 72,795 மாணவர்களும் பெற்றுள்ளனர்.