சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பேசுகையில்,
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய ஆய்வு குழுவின் கருத்துக்கள் மத்திய அரசின் மனதை மாற்றும் என நம்புகிறேன். இன்று புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு மீண்டும் உதவிகள் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளோம். புயலால் பாதித்த மக்களுக்கு சோறு சாப்பிடும் எல்லோரும் உதவவேண்டும். கிடைக்கவேண்டிய காவிரி நீரை தடுக்காமல் இருக்க எல்லா வழிகளையும் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் ஒரு நாடு, ஒரு நதி என நினைக்க வேண்டும் எனக்கூறினார்.
அதேபோல் திமுக நடத்தும் அனைத்து கட்சி கூடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு,
திமுக சார்பில் நடைபெற்ற தோழமை கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல் திமுக சார்பில் அனைத்து கட்சி போராட்டத்திற்கும் அழைப்பு வரவில்லை எனவும் கமல் தெரிவித்தார்.