ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து திருச்சி முடுக்கு பட்டியில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி செப் 11 ஆம் தேதி திருச்சி மாநகராட்சி 49 வது வார்டு உட்பட்ட முடுக்குபட்டியில், கடந்த பல வருட காலமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த இடம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வீட்டை காலி செய்யுமாறு பொது மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிபிஐ (எம்) சார்பில் பொதுமக்கள் இன்று அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். பிறகு பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு சிபிஐ(எம்) மாநகர், மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் மற்றும் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க தலைவர் கணேசன், செயலாளர் ராஜா, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் முடுக்குப்பட்டியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 13- ஆம் தேதி(நாளை) திருச்சி ஜங்ஷன் ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.