Skip to main content

பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

Published on 24/01/2018 | Edited on 24/01/2018
பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.



தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணத்தை உயரத்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் பேருந்து கட்டணம் 50 சதவீத்ததில் இருந்து 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இப்படி மாற்றியமைக்கப்பட்ட கட்டண உயர்வானது தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அரசு தெரிவித்தது.

இதையடுத்து, கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாவிடில் பொதுவாழ்க்கையை விட்டுகூட விலகுவோம் என்றும் பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்