Published on 17/12/2021 | Edited on 17/12/2021
தமிழ்நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திவருகின்றனர். இதனையொட்டி சென்னையில் பெரும்பாலான வங்கிகள் செயல்படவில்லை. மேலும், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட எந்தப் பணியும் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். அதனால் ATM மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.