Skip to main content

“இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
The people of Chennai are making an important contribution to the development of India PM Modi's speech

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்துள்ளார். அதன்படி சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அதன்பின்னர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ‘வணக்கம் சென்னை’ எனக் கூறி பிரதமர் மோடி பேசுகையில், “திறமை, வணிகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையமாக சென்னை திகழ்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் சென்னை வரும் போதும் உற்சாகம் அடைகிறேன். நான் தமிழகம் வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்கான உறுதிப்பாட்டை நான் ஏற்றுள்ளேன். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலையம் எனப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து சென்றிருக்கிறோம். உலகளவில் பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியாவை உருவாக்க உறுதிப்பாடு எடுத்துள்ளேன்” எனப் பேசி வருகிறார். 

சார்ந்த செய்திகள்