சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பேசுகையில்,
சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அந்த நபர்கள் வேறோ யாரோ ஒருவர் முன்பின் தெரியாதவர்கள் அல்ல. அந்த குடியிருப்பில் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரிந்தவர்கள் என்பது நிரூபணம் ஆகிறது. இது மன்னிக்க முடியாத குற்றம்தான் அதனால் அவர்களை தெருவில் வைத்து அடித்து உப்புக்கண்டம் போடவேண்டும் என்றில்லை. அது இன்னொரு கொலையாகிவிடும்.
சட்டப்படி நாம் கட்டி வைத்திருக்கும் நீதிமன்றங்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நீதி விரைவாக செயல்பட வேண்டும். நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. சட்டத்தில் இருப்பதிலேயே மிக கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும். மாற்றுதிறனாளி குழந்தையை வன்மத்திற்கு உப்படுத்திய இவர்களுக்கு இவ்வளவு மனிதாபிமானம் கொடுக்கவேண்டாம்.
எட்டுவழி சாலையை பொருத்தவரை மக்கள் அந்த திட்டத்தை கேட்டார்களா? என்ற கேள்வியே முன்வருகிறது. எங்களுக்கு எட்டு வழி சாலை வேண்டும் இந்த எட்டு வழிச்சாலை இல்லாமல் எங்கள் வாழ்க்கை தடம்புரண்டு, தடைப்பட்டு நிற்கிறது என்று மக்கள் கேட்டார்களா? அல்லது இந்த ஒருவழிதான் உள்ளதா? பல அரசியல் தலைவர்கள் சொல்லியும் இதுதான், இப்படித்தான் என மக்களை வற்புறுத்தக்கூடாது எனக்கூறினார்.