ஓய்வூதியம் கோரி ஆர்ப்பாட்டம்
பெண்களுக்கு 50 வயதிலும், ஆண்களுக்கு 55 வயதிலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். திருமண நிதியாக 25ஆயிரம் கொடுக்க வேண்டும். விபத்து நடந்து இறந்தால் 5 லட்சம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ஒரு லட்சம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
படம்: அசோக்குமார்