
ஈரோட்டில் தனியார் மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, செங்கோடபாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (44) ஜே.சி.பி. டிரைவர். திருமணம் ஆன இவருக்கு கணைய பிரச்சனை இருந்து வந்தது. இதற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை வேல் முருகனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த வேல்முருகன் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
அங்கு தான் கட்டியிருந்த லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கழிவறையை விட்டு வேல்முருகன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிப்பறை சென்று பார்த்தபோது வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு ஜி.ஹெச் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வேல்முருகன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.