திருச்சி துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஏற்கனவே கரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று கல்லூரியை சேர்ந்த சுமார் 135 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் திருச்சியை சேர்ந்த மருத்துவர் ஒருவரும், தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருச்சியிலிருந்து சார்ஜா விமானம் என்று காலை புறப்பட தயாராக இருந்தது.
அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் மருத்துவ சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது கடலூரை சேர்ந்த 43 வயது ஆண் பயணி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த 45 வயது ஆண், பெண் இருவருக்கும் கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.