Skip to main content

ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவியேற்பு எப்போது? 

Published on 18/04/2020 | Edited on 18/04/2020


தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் காலியாக இருந்த 70-க்கும் மேற்பட்ட ராஜ்யசபா இடங்களுக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் உள்பட இந்தியா முழுவதும் 70-க்கும் மேற்பட்ட ராஜ்யசபா எம்.பி.க்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

 

parliament


 


கரோனா வைரஸ்  தாக்கத்தால் இவர்களுக்கான பதவி பிரமானம் நடைபெறவில்லை. பதவியேற்பு நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பிறகு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகள் நடக்கவிருப்பதால் ராஜ்யசபா பதவியேற்பு நிகழ்வும் நடத்தப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதுகுறித்து, பிரதமர் மோடியிடம் துணை ஜனாதிபதியும் ராஜ்யசாபாவின் தலைவருமான வெங்கையா நாயுடுவும் விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த எதிர்பார்ப்பு ராஜ்யசபா எம்.பி.க்கள் மத்தியில் எதிரொலிக்கும் நிலையில், "ஊரடங்கில் தளர்வுகள் நடத்தப்படுவதால் ஏப்ரல் 25-க்கு பிறகு எம்.பி.க்களின் பதவியேற்பு வைபவம் நடக்கலாம் " என அதிமுக, திமுக மேலிட வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்