தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து (பரவலாக டி. ஆர். பச்சமுத்து) எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தரும் ஆவார். இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் ஆவார். தமிழகத்தின் பார்க்கவக் குலத்தைச் சேர்ந்தவர். இவர் டாக்டர் பாரிவேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார். இந்திய ஜனநாயகக் கட்சி எனும் அரசியல் கட்சியினை 2010இல் இந்திய ஜனநாயகக் கட்சியை தொடங்கினார் பச்சமுத்து.
தற்போது பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 13,91,011. ஓட்டு போட்டவர்கள் 10,94,644 தி.மு.க., கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சிவபதி, அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் உட்பட 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
முதல்வர் எடப்பாடி மற்றும் சிவபதி இருவரும் மாப்பிள்ளை - மச்சான் என்று செல்லமாக பேசிக்கொள்வார்கள். முதல்வர் சிபாரிசில் சீட்டு வாங்கி முன்னாள் அமைச்சர் சிவபதி இந்த தொகுதியில் கண்டிப்பாக நான் ஜெயிப்பேன் என் ஜாதிகள் மக்கள் இந்த தொகுதியில் இருக்கிறார்கள் என்று முத்திரையர் ஜாதி கட்சி தலைவர்களை வைத்து இந்த தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து கண்டிப்பாக வெற்றி என்கிற மிதப்பில் வலம் வந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்எதிராக இருக்கிறது.
முதல் சுற்றில் 1வது சுற்று அ.தி.மு.க., வேட்பாளர் சிவபதி 14,710 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் பாரிவேந்தர் 32,887 வாக்குகளும் பெற்றனர். 7வது சுற்றில் அ.தி.மு.க வேட்பாளர் சிவபதியை விட 1,40,207 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னேறி கடைசியில் பாரிவேந்தர் 4,53,531 - சிவபதி - 1,88,241 - ஆக 2,65,290 வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தர், மருத்துவ கல்லூரி மற்றும் பொறியில் கல்லூரிகள், மற்றும் இரண்டு தொலைக்காட்சிகளை துவக்கிய பெருமை உள்ள பாரிவேந்தர் முதல்முறையாக இந்திய பாரளுமன்றத்தில் நுழைவதை உறுதி செய்து உள்ளனர் பெரம்பலூர் மக்கள்.